ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கருதப்படும் 5 ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப் படகுகளில் 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (11) கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் இலங்கை அருகே உள்ள நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சிறிய கண்காணிப்பு கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அறிவுறுத்தலை மீறி எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தங்கச்சிமடம், ராமேசுவரம் பகுதிகளைச் சேர்ந்த 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து
இலங்கையில் இடம்பெற்ற 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன
வடமாகாணசபையின் அடுத்த முதல்வர் யாரென்பது தொடர்பில் ஊகங்கள் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை அரசு உலகத் தமிழர் பேரவையின் தலைவர்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*