வழிநடத்தல் குழு கூட்டத்தினில் அதிகமாக பேசியது நானே – சுமந்திரன்

74 தடவைகள் கூடிய அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு கூட்டத்தினில் கூடிய அளிவினில் தானே பேசியதாக தெரிவித்துள்ளார் சுமந்திரன் எம்.பி.
“வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஆனால், நாட்டில் அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. இதனை கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் வழிநடத்தல் குழுவிலும் இல்லை. அதனை கொண்டு வருவதற்கான சாத்தியம் அரசாங்கத்துக்குள்ளும், நாட்டுக்குள்ளும் கிடையாது. அந்த உண்மையை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதில் உண்மையாக இருக்கின்றேன்” என அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சமந்திரன் “வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்ற விடயத்தை இன்றே என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஏனென்றால் 74 தடவைகள் அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு சந்தித்து பேசியிருக்கின்றது. ஆனால், அவரின் இந்த நிலைப்பாடுகளின் ஒரு விடயம் தொடர்பிலும் வாய்திறந்து பேசியது கிடையாது.

இவை அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உரிய நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்பது அந்த தீர்மானத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.
அப்போது மக்களுக்கு தெரியவரும். இவற்றுக்காக பேசியவர்கள் யார்? பேசாமல் வாயை மூடிக்கொண்டிருந்தவர்கள் யார்? என்ற விடயம் மக்களுக்கு தெரியவரும்.
அமைப்பு வழிநடத்தல் குழுவில் தான் உள்ளிட்ட அமைச்சர்களான சுவாமிநாதன், மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளோம்.
அமைச்சர் மனோ கணேசன் சில விடயங்கள் குறித்து அங்கு பேசியிருக்கின்றார். அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கு ஒரு நாளேனும் வாய் திறந்து பேசியதே கிடையாது.
ஆனால், புதிய அரசியல் அமைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வியங்கள் குறித்து இரா.சம்பந்தன் மற்றும் நான் மட்டுமே பேசியிருந்தோம்.

இந்த வரைபை உருவாக்குவதில் காரசாரமான கருத்துகளை நாங்கள் இருவர் மட்டுமே முன்வைத்திருந்தோம். ஏனைய மூவரும் பேசியதே கிடையாது. மதம் சார்பற்ற நாடு என்ற விடயம் குறித்தும் நான் மட்டுமே அதிகமாக பேசியிருந்தேன். இந்நிலையில், ஒரு நிலைப்பாட்டை எடுக்காத ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்