ஐநாவின் விசேட அறிக்கையாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கிளிநொச்சியில் சந்தித்தார்

ஐநாவின் விசேட அறிக்கையாளர் ஆன பவுலோ கிரீப் என்பவர் இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார்.

சந்தித்த அவரிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான எம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த அவர் இப் போராட்டத்தை மதிகின்றேன் நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு அரசுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்