தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (13) கொழும்பிலும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பு – கோட்டே புகையிரத நிலையத்திற்கு முன்பாக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டாம் எனக் கோரி நாளை வடக்கில் ஹர்த்தால் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
