யாழில் நடைபெற்றுவரும் போராட்டம் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு! | காணொளி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆளுநர் அலுவலகத்தின் வாயில் மூடப்பட்டு, கலகமடக்கும் பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலர் பங்கெடுத்தனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பாதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளிள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வடக்கின் இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் அச்சுறுத்தும்விதமாக சிறப்பு அதிரடிப்படையினர் வரவளைப்பு

Posted by Eeladhesam News on Donnerstag, 12. Oktober 2017

About இலக்கியன்

மறுமொழி இடவும்