போராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது!

இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடானில் 300ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் மீண்டும் ஸ்ரீலங்கா திரும்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் தாம் தமிழர் என்ற காரணத்திற்காக அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்தோனேசிய அரசாங்கம் மறுப்பதாக ஈழத் தமிழ் அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தம்மை வேறு நாடுகளுக்கு மாற்றுமாறு கோரி இந்தோனேசியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் நேற்று முதல் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது

வாழ்வை தொலைத்து வந்தோம் எதிர்காலம் எங்கே,? ஐக்கிய நாடுகளட சபையே உறக்கமா, தமிழ் அமைப்புக்களே மௌனமாய் இருப்பது ஏன் என்ற வாசகங்களை தாங்கியவாறு இவர்கள் கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாதன் பார்தீபன் என்ற ஈழ தமிழ் அகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்