யாழில் மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் வடமாகாணசபை!

யாழ்ப்பாணத்தில் நாளை சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால கலந்துகொள்ளும் தேசிய தமிழ் மொழித் தின விழாவை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிப்பர் என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் “உதயனுக்கு” தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்வு வழங்காமல் இருப்பதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் புறக்கணிப்பார் என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தெரியவருகின்றது. அவர்களில் சிலர் நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே தொலைநகல் மூலம் அறிவித்து விட்டனர் என்றும் “உதயன்” அறிந்தான்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்