யாழ் வரும் மைத்திரி – புறக்கணிக்கவுள்ள சம்பந்தன்?

யாழ்ப்­பா­ணத்­தில் நாளை நடை­பெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கலந்­து­ கொள்­ள­வுள்ள நிலை­யில் அந்த நிகழ்வை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் புறக்­க­ணிப்பார் என்று தெரி­கி­றது.

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­மாட்­டார்­கள் என்­றும் கூறப்­பட்­டது. அவர்­க­ளில் சிலர் தாம் நிகழ்­வில் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என்­பதை ஏற்­க­னவே தொலை­ந­கல் மூலம் அறி­வித்­து­விட்­ட­னர் என்­றும் உத­யன் அறிந்­தான்.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் ஈடு­பட்­டுள்ள நிலை­யில் அதற்கு ஒரு தீர்வை அரச தலை­வர் வழங்­கா­மல் இருப்­பதை அடுத்தே அவ­ரது நிகழ்­வைப் புறக்­க­ணிக்க சம்­பந்­த­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் முடி­வெ­டுத்­துள்­ள­னர் என்று தெரி­கி­றது.

எதிர்க் கட்­சித் தலை­வ­ரின் புறக்­க­ணிப்­புத் தொடர்­பில் பகி­ரங்­க­மான ஊடக அறி­விப்­புக்­கள் எவை­யும் விடுக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் சனிக்­கி­ழமை யாழ்ப்­பாண நிகழ்­வுக்­காக அன்­றைய தினத்­தில் வேறு எந்த நிகழ்­வி­லும் கலந்­து­கொள்­வ­தைத் தவிர்த்து வந்த அவர், நேற்று அத்­த­கைய வேறு நிகழ்­வு­க­ளில் கலந்­து­கொள்­வ­தற்­குச் சம்­ம­தித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்­தார்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விவ­கா­ரம் தொடர்­பில் பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்­கித் தரு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. அதற்­கான நேர­மும் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

இதனை அடுத்தே அரச தலை­வ­ரின் நிகழ்­வில் கலந்­து­கொள்­ளா­மல் இருப்­பது என்­கிற இறுக்­க­மான முடிவை சம்­பந்­தர் எடுத்­தி­ருப்­பார் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

நிகழ்­வில் தான் பங்­கேற்கமாட்­டார் என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நேற்­றைய தினமே தொலை­ந­கல் ஊடாக அறி­வித்­தார் என்று அறிய முடிந்­தது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன் மற்­றும் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் ஆகி­யோர் இன்­றைய தினம் அறி­விக்­க­வுள்­ள­னர் என்­றும் அறி­ய­வந்­தது.

இதே­வேளை, அரச தலை­வ­ரின் வரு­கை­யை­யொட்டி தேசிய தமிழ்த் தின விழா நடை­பெ­றும் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி வளா­கத்­தைச் சுற்றி பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­கள் நேற்­று­மு­தலே போடப்­பட்­டுள்­ளன. ஆயு­தம் தாங்­கிய படை­யி­னர் காவ­லுக்கு நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய
“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது.
பிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம் 1960இல் சத்தியாக்கிரகம்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*