யாழ்ப்பாணம் சிறைச்சா லைக்குள் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரைப் பார்க்கச் சென்றுள்ளார். இவர் கொண்டுசென்ற உணவுப்பொதியை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது உணவுப் பொதிக்குள் மறைத்து வைத்திருந்த 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட இவர் விசாரணைகளின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சா லையில் கைதிகளைப் பார்க்க வருவோர் உணவுக்குள் போதைப்பொருள் களை மறைத்துவைத்து கைதிகளுக்கு வழங்க முற்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

