பட்டினியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 84 வது இடம்

உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மொத்தம் உள்ள 119 நாடுகளில் இலங்கை 84 வது இடத்தை பெற்றுள்ளது.

அயல் நாடான இந்தியா 100 வது இடத்தை பெற்றுள்ளதாக அந்த பட்டியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம், மியன்மார், ஈராக், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இலங்கையை விட இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

பாகிஸ்தான், இந்தியா ஆகியன இலங்கையை விடவும் பின் தங்கியுள்ளன.

சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவிலேயே பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இலங்கையின் அண்டை நாடுகளான சீனா (29), நேபாளம் (72), மியான்மர் (77), பங்களாதேசம் (88), இந்தியா (100) பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்