கிழக்கிலும் வாள்வெட்டுக் குழுக்கள் – ஒருவர் படுகாயம்

ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக, திருகோணமலை புளியங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியின் மீது இன்று (வெள்ளிக்கிழமை) காலை வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, முச்சக்கரவண்டியும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் மூன்று பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்றிருந்த
யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தலைதூக்கியுள்ளது. இன்று இரவு இடம்பெற்ற இருவேறு வாள்வெட்டுச்
யாழ் சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*