அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் உறவினர்கள், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை ஆரம்பமான இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் இன்று நடத்தப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்கள் இன்றுடன் 233ஆவது நாளாக வவுனியாவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, இன்று
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென யாழ் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று
இலங்கையில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*