மைத்திரியின் யாழ் வருகையை எதிர்த்து யாழில் மாபெரும் போராட்டம்

சிறீலங்கா ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து இன்று யாழில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று வடமாகாணத்தில் பூரண கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்துகொள்ள யாழ்.இந்துக்கல்லூரிக்கு வருகை தந்த மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டத்தை மெற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக சில ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிடிருந்தபோதும் மக்கள் அணிதிரளாக வந்து மைத்திரிக்கு எதிரான போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈழதேசம் இணைய செய்தியாளர் சாதுரியன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்