வவுனியாவில் சிறுமியை கடத்த முற்பட்டதால் பரபரப்பு!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவரை கடத்துவதற்கு முயன்றுள்ளமை, பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடுநிசியில் வீட்டுக்குள் நுழைந்து மர்ம நபரொருவர், தூக்கத்தில் இருந்த சிறுமியை தூக்கிச் சென்றுள்ளார். எனினும், சிறுமியின் தந்தையார் விழித்துக்கொண்டு அவரை துரத்தியபோது, சிறுமியை கீழே போட்டுவிட்டு மர்ம நபர் ஓட்டமெடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, சந்தேகநபருடையது எனக் கருதப்படும் இரு பாதணிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணைகள் தொடர்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வயோதிபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். குறித்த வயோதிபர் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்