போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது கடினம்! – ஐ.நா. விசேட அறிக்கையாளர்

போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் என்பது இலகுவாக நிறைவேற்றப்படக்கூடிய ஓர் விடயம் அல்ல என ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தலைமையிலான குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுடன் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள், வடக்கின் தற்போதைய நிலைமைகள், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பப்லோ டி கிரீஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தனிநபர்களையும் அடையாளப்படுத்தி அவர்களை தண்டனைக்கு உட்படுத்துதல், அல்லது யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனங்கள் மற்றும் இந்த விடயங்களை குழப்பியவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பது என்பது கடினமான விடயமாகும்.

எனினும் ஒருவருக்கொருவர் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் மாத்திரமே போர்குற்றம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பப்லோ டி கிரீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் இதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், கூட்டுமுயற்சியுடன் நீதிச் செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே, நீதிக் கோரிக்கையினை முன்வைத்துள்ளவர்களுக்கு சாதகமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் பப்லோ டி கிரீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்