சோமாலியாவில் தாக்குதல் 30 பேர் பலி!

சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும், இங்கு அல் கைதா மற்றும் அல் ஷாபாப் ஆகிய இரண்டு இயக்கங்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால், இவ்விரு இயக்கங்களில் ஒன்று இத்தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்