மகளை தாக்கிய தந்தை கைது!

தனது 9 வயதான மகளை மரக்குற்றியால் தாக்கிய தந்தையொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் நேற்று இரவு எட்டு மணியளவில் மொரவெவ பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

மதுபோதையில் இருந்த தனது கணவர், சிறிய மரக் குற்றியொன்றினால் மகளின் நெற்றி மற்றும் முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்படுத்தியதாக குறித்த சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்