வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் சினிமா நடிகருக்கு வைத்த பதாகைக்கு நடந்த பரிதாபம்!

நேற்றைய தினம் கட்டப்பட்ட விஜய்யின் மெர்சல் பதாகை வல்வெட்டித்துறையில் நேற்று இரவு கிழிக்கபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த பதாதைகுறித்து நேற்றையதினம் எமது இணையத்தில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.

இதுகுறித்து இன்றையதினம் மீண்டும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் எமது இணையத்துக்கு செய்தி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் குறிப்பிட பட்டுள்ளதாவது ,

சினிமாக்காரர்கள் மன்னிக்கவும் நாங்கள் 40000 ஆயிரத்திற்கும் மோற்ப்பட்ட நிஜமான கீறோக்களை எமது மண்ணில் புதைத்துள்ளோம்.

பல்லாண்டு காலமாக காப்பாற்றப்பட்டு வந்த வல்வெட்டித்துறையின் கௌரவத்தினை இன்று மழைக்கு முளைத்த காளான்களாய் ஊரில் தோன்றியவர்கள் அழிக்கும் போது காலம் காலமாக ஊரின் மானத்தினை கட்டிக் காப்பாற்றி வரும் எந்த உணர்வுள்ள வல்வெட்டித்துறையானும் இதை சகிக்க மாட்டான் எனவும் அந்த பிரதேச வாசிகள் சிலர் எமது இணையத்துக்கு தெரிவித்தனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்