பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்!

2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் கடந்த 14.10.2017 சனிக்கிழமை மாலை 15.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சாந்திக்குமார் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் நடந்த நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்ரினன்ட் கேணல் அன்புக்குமாரின் சகோதரர் ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் இடம்பெற்றது.
அரங்க நிகழ்வுகளாக கவிதை, பேச்சு, எழுச்சிப்பாடல், எழுச்சி நடனம், மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.சத்தியதாசன் அவர்களின் சிறப்பு உரை என்பன இடம்பெற்றன.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்