அரசியல் கைதிகள் தமிழர்கள் என்பதாலேயே விடுதலை செய்யப்படவில்லை – சுமந்திரன்

தீவிரவாத செயற்பாடுகளில் 1980களில் ஈடுபட்ட சிங்கள கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரனி சுமந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய சுமந்திரன் தமிழ் அரசியல் கைதிகள் என்பதால் அவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் பின்னிப்பதாக சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறீலங்கா ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, சட்டமா அதிபர் ஆகியோருடன் கைதிகளின் வழக்கு விசாரணை மற்றும் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியதாகவும் ஆனாலும் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை, கைதிகள் பலர் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் அதிகமானவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது.

ஆனால், மூன்று வருடங்கள் கடந்தும் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றுவது அல்லது நீக்குவது பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை , அதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை என்றும் பதிலளிப்பதற்காக அமைச்சர் சாகல ரட்னாயக்கா உட்பட பத்துக்கும் குறைவான உறுப்பினர்கள் மாத்தரமே சபையில் இருந்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்