பண்டிகைகளை இழந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

தங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாளில் இருந்து தங்கள் வீட்டில் இது வரை எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

240 நாட்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் தங்களுக்கு எந்த ஒரு தீர்வும் வழங்கப்படவில்லை என கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாங்கள் உறவுகள் காணாமல் போயுள்ள நிலையில், தாங்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருவதாகவும் இந்த நல்லாட்சி அரசும் பாராமுகமாக செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இனிவரும் காலத்தில் சரி தமக்கு சரியான தீர்வை பெற்றுத் தர எல்லா அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டும் என தாங்கள் வேண்டுகோள் விடுப்பதாக அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான போராட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது அங்கு கூடிய உறவுகள்,
தமது போராட்ட வடிவங்கள் ஜெனிவா அமர்வின் பின்னர் மாற்றப்படலாம் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி
வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றுவது உட்பட மனித உரிமை ஆணைக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*