யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சிறீலங்கா ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இன்றைய தினம் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்றைய தினம் சிறீலங்கா ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்தப் போராட்டம் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான உத்தரவாதம் அளித்ததையிட்டு கைவிடப்பட்டது.

தங்களது வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.

இவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பாரிய ஹர்த்தால் நடத்தப்பட்டதோடு சிறீலங்கா ஜனாதிபதி அங்கு விஜயம் செய்த தருணத்தில் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்த பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் சிறீலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரியிருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் அந்த சந்திப்புக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்