பண்ருட்டி ராமச்சந்ந்திரனை தங்கள் பக்கம் இழுக்கும் தினகரன் அணி

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கிறதாம் தினகரன் அணி.

எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய இளம் தளபதியாக வலம் வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து ஐநாவில் பேச எம்.ஜிஆரால் அனுப்பி வைக்கப்பட்டவர் அவர்.

ஐநாவில் இருந்து பண்ருட்டியார் திரும்பியபோது எம்ஜிஆரே விமான நிலையம் சென்று அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் பாமகவில் இணைந்தார். தனிக்கட்சி தொடங்கினார்.

பின்னர் விஜயகாந்த் தேமுதிக தொடங்கிய போது அக்கட்சியின் அவைத் தலைவரானார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

ஜெயலலிதாவும் பண்ருட்டியாருக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தால் ஓரம்கட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். தற்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக வியூகம் வகுத்துச் செயல்பட பண்ருட்டியார் தேவை என தினகரன் தரப்பு கருதுகிறதாம். ஆகையால் அவரை வளைக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளனவாம்.

இதனடிப்படையில்தான் நேற்று முன்தினம் தினகரனை பண்ருட்டியார் சந்திக்கப் போகிறார் என தகவல் பரவியதாம். தற்போதைய சூழலில் தினகரனை பண்ருட்டியார் எந்த நிமிடத்திலும் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்