வவுனியாவில் தமிழ் சினிமா பாணியின் பணம் பறிக்கும் கும்பல்

வவுனியா, இலுப்பையடி பகுதியில் வர்த்தகர்களிடம் இளைஞர் குழுவொன்று பணம் பறித்துவருவதாக குற்றச்சாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர் குழுவானது மாலைவேளையில் மதுபோதையில் வருவதுடன், அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களிடம் பணம் கேட்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வர்த்தகர்கள் பணம் தர மறுக்கும் பட்சத்தில் அவர்களுடன் தகராறில் ஈடுபடுவதாக சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் அந்தக் குழுவானது பணம் வழங்க மறுத்த வர்த்தகரொருவருடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னர் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததன் காரணமாக சில நாட்களாக பணம் பறிக்கும் செயற்பாட்டை நிறுத்தியிருந்த இளைஞர் குழுவானது தற்போது மீண்டும் தமது கைவரிசையைக் காட்டத்தொடங்கியுள்ளதால் பொலிஸார் இந்த விவகாரத்துக்குத் தீர்வொன்றைப் பெற்றுத்தரவேண்டுமென்று குறித்த வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்