எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை!

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில்; நடைபெற்றுள்ளது. 30.09.2017 வரையான திட்டங்களின் பௌதீக முன்னேறம் மற்றும் அடுத்த ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அதில், அமைச்சின் கீழான திணைக்களங்கள்; ரீதியான வேலை முன்னேற்றம் ஆராயப்பட்டபோது மகளிர் விவகார திட்டங்களில் 60 வீதமும், சமூகசேவைகள் திணைக்களத்தின் கீழான திட்டங்களில் 70 வீதமும், தொழில்துறை திணைக்களத்தின் கீழான திட்டங்களில் 55 வீதமும், கூட்டுறவு திணைக்களத்தின் கீழான திட்டங்களில் 65 வீதமும் பௌதீக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விளக்கிக்கூறப்பட்டிருந்ததுடன், தேவயான கட்டுநிதி கிடைக்கப்பெறாமையால் பௌதீக முன்னேற்றத்திற்கான நிதி கொடுப்பனவை முழுமையாக செய்ய முடியாதுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களால் எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்..

மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வளித்தல் பிரிவிற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாததால் அப்பிரிவுகளின் செயற்பாட்டை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒதுக்கப்படும் திட்டங்களை உரியமுறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு அலுவலர்கள் அரப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் தகுந்த ஆலோசனைகள், திட்டங்கள் ஆகியவற்றை அலுவலர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாண சபைக்கு போதிய நிதி இல்லை. வருமானத்தை ஈட்டக்கூடிய நிறுவனங்களோ திட்டங்களோ எம்மிடம் இல்லை. கிடைக்கும் நிதியில் இருப்பதை பகிர்ந்து மக்களுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கொடுக்கும் உதவித்திட்டங்களும் போதுமானதாக இல்லை.

ஆனபடியால், வட மாகாணத்திற்குள் தொழில் நிறுவனங்களை உருவாக்ககூடியதான எமது சூழலுக்கு பொருத்தமான தொழில் முயற்சிகளுக்கான திட்டங்களை முன்வைத்தால் அவற்றை நடைமுறைப்படுத்தி எமது மாகாணத்தை முன்னேற்ற முடியும். இவ்வாறு அமைச்சர் கூறியிருந்தார்.

மகளிர் விவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், ஆலே-hசனைக்குழு உறுப்பினர்களாக விளங்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் அவர்களும் இ.ஜெயசேகரம் அவர்களும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களும் இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்