முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – சம்பந்தன் உறுதி!

கடந்த தேர்தலின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செய்துகொண்டஒப்பந்தத்தின்படி முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பாக உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான விசேட சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பங்கீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தரவே முயற்சிக்கிறது என உறுதியளித்ததோடு இரண்டு சமூகத்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் தீர்வுகளைக் காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, எதிர் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், சிறீதரன், சார்ள்ஸ் நிர்மல நாதன் மற்றும் வியாளேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்