கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படுமாம்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளை ஜனவரி மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்க முடியும் என நம்புவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

படையினர் வசமிருந்த 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கொடுப்பனவுகளை அமைச்சு செலுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

கேப்பாப்பிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் வௌியேறி வருவதாகவும் அந்த நடவடிக்கை விரைவில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியது.

இதேவேளை, படையினர் முழுமையாக அங்கிருந்து வௌியேறி உத்தியோகப்பூர்வமாக அறிவித்த பின்னர் காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.

இராணுவ முகாமை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சொந்த நிலத்­தில் வாழும் உரிமை மறுக்­க­பட்­டுள்­ளது. நாம் எதற்­குப் பிறந்­தோமோ அவை அனைத்­தும் இல்­லா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளன எனவே இனி­யும் போரா­டிப்
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி
முல்லைத்தீவு மாவட்டம் கேப்­பா­பு­ல­வில் இரா­ணு­வத்­தின் வச­முள்ள எஞ்­சிய காணி­களை விடு­விக்க வேண்­டும் என்று கோரி மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் மேல­திக செய­லரி­டம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்