இலங்கையில் மூழ்கிய இந்திய கப்பலிலிருந்து 7 பேர் மீட்பு

இந்தியாவின் சரக்குக் கப்பல் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாருக்கு உள்ளாகி நீரில் மூழ்கியது.

பின்னர் கப்பலில் இருந்த அனைவரையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இந்தியாவின் மரியா மூருதயா என்ற கப்பலே இவ்வாறு நீரில் மூழ்கியது.

காலியில் இருந்து 68 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இந்தக் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் இலங்கையில் கடற்படைக்கு அறிவித்திருந்தது.

காலி கடற்பகுதியில் சஞ்சரித்த கப்பல்களுக்கும், சர்வதேச கப்பல்களுக்கும் இலங்கை கடற்படை இதனை அறிவித்தது.

இந்தக் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக மீன்பிடி படகொன்றில் சென்ற மீனவர்கள் மூலம் கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கு நேற்று பிற்பகல் பீ 490 ரக தாக்குதல் கப்பலொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்