பேர்லின் தமிழ்ச் சிறார்கள் தாயகத்துச் சிறார்களுடன் ஓர் மதியவிருந்து

தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்தங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களும் மகிழ்வாக வாழ்வேண்டும் மகிழ்வாக தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தாயத்தில் உள்ள சிறார்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுதல் உளரீதியான ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் அவர்களது கவலைககைள மறக்கச் செய்து கல்வியை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் ஜேர்மனி பேர்லின் நகரில் வசிக்கும் செல்வி இனியவள் ஜெயசங்கர் மற்றும் செல்வன் ஜெயசங்கர் ஈழவன் ஆகியோர் கடந்த 18.10.2017 அன்று தாயகத்தில் அச்சுவேலி திருக்குடும்ப கன்னியர்மடத்திலும் யாழ் நாயன்மார்கட்டு செல்லா வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபை சிறார் இல்லத்துச் சிறார்களுக்கும் மதிய விருந்தளித்துள்ளனர். அச்சுவேலி திருக்குடும்ப கன்னியர்மட சிறார் விடுதியில் இடம்பெற்ற மதிய விருந்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் நாற்சதுர சுவிசேச சபையில் தங்கியுள்ள பிள்ளைகளுக்கு மதிய விருந்து வழங்கும் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் யாழ்-மண்டைதீவு மகா வித்தியாலய அதிபருமான திரு.சி.இளங்கோ அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இனியவள் மற்றும் ஈழவன் ஆகிய செல்லங்களுக்க தாயகத்துச் சிறார்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் புலம்பெயர்நது வாழும் ஏனைய சிறார்களும் இவ்வாறான செயற்பாடுகளை தாயகம் நோக்கி முன்னெடுக்க வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகின்றோம்.

 

நன்றி
செ.கஜேந்திரன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்