யாழில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி

யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ் மணியம் தோட்டப்பகுதியில் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் மனியம் தோட்டம் பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மீனவர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பொலிஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு வெளியிட்டமையினால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரி வேண்டும் என்றே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டாரா?, அல்லது கை தவறி துப்பாக்கி இயங்கியதா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

காயமடைந்தவர் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிலைமை தீவிரமாக உள்ளதெனவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்ற பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்