புதிய அரசியல் யாப்பை எதிர்க்க எம்மோடு கைகோருங்கள் -கஜேந்திரகுமார் அழைப்பு

தேர்தல்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு நீங்கள் வாக்களிக்கவிட்டாலும் பிரச்சனை இல்லை ஆனால் தமிழ் இனத்துக்கு முழுக்க முழுக்க பாதகமான முறையில் கொண்டு வரப்படும் புதிய அரசியல் யாப்பை எதிர்ப்பதற்கு மக்களாகிய நீங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு கைகோர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட பணிமனை திறப்பு விழாவும் மக்களுடனான சந்திப்பின் போதுமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தேசம்,தாயம்,சுயநிர்ணயம் என்ற கொள்கையே எமது இனத்தின் 65 வருடகால அரசியல் கட்சிகளினதும் கொள்கையாகும் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் ஒரு தீர்வு காணவேண்டும் என்பதே அது இது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கிய கொள்கை அல்ல கடந்த காலத்தில் தமிழர் அரசியலில் இதுவே இருந்து வந்தது இந்த கொள்கை 51 ஆம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. தந்தை செல்வநாயகம் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி முதல் தடவையாக தேசம் என்ற அந்தஸ்த்தைப்பற்றி பேசினார்,சுயநிர்ணயத்தைப்பற்றி பேசினார்.

இந்த கோட்பாட்டை சரியான முறையில் விளங்கி கொள்ளாது வெறும் கட்சி அரசியலில் மட்டும் ஈடுபடுவதாக அமைந்தால் நாம் அழிவோம் .அதையும் தாண்டி தான் நாங்கள் சொல்கின்றோம் இந்த கோட்ப்பாடு என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடையது அல்ல தமிழரசு கட்சியில் தொடக்கி படிப்படியாக வளர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளும் இதை கடைப்பிடித்து இந்த கொள்கை வளர்ந்து வந்திருக்கின்றது.

இன்றைக்கு தனி நாட்டுக்கு மாற்றீடாக எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவேண்டுமேயானால் இந்த கொள்கையின் அடிப்படையில் தீர்வு எட்டுவதன்மூலம் மட்டும்தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

நாம் இவ்வளவு காலமும் தமிழருக்கு இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்ற விடயத்தை உலகத்துக்கு பேச கூடியதாக இருப்பதற்கான அடிப்படை காரணம் இலங்கையில் மூன்று அரசியல் அமைப்புகளை இதுவரையில் உருவாக்கியிருக்கின்றார்கள்.இந்த மூன்று அரசியல் அமைப்புகளுக்கும் தமிழ் மக்கள் தமது ஆதரவை கொடுக்கவில்லை ஆனால் முதல் தடவையாக வர இருக்கின்ற இந்த புதிய அரசியல் அமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாக இருக்கும் நிலையில் தமிழ் மக்களுடைய சொந்த தலைவர்களே நீங்கள் இதை ஆதரியுங்கள் என தமிழ் மக்களிடம் சொல்லி தமிழ் மக்கள் இதை ஆதரித்தால் அதற்க்கு பிறகு இனப் பிரச்சினையை பற்றி கதைத்து பிரயோசனம் இல்லை ஏனென்றால் நாங்களாகவே விரும்பி இங்கே ஒரு அரசியல் அமைப்பை கொண்டுவந்து விடுவோம்.

இந்த நிலைமையிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றவேண்டும்.தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு கூட தமது தேர்தல் காலத்தில் தேசம் தாயகம் சுயநிர்ணயம் என கூறித்தான் வாக்கு கேட்டார்கள்.51ஆம் ஆண்டிலிருந்து எமது மக்கள் இந்த கொள்கைக்காகவே வாக்களித்தார்கள் .எனவே எமது தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் பார்த்தல் இந்த புதிய அரசியல் அமைப்பு என்பது எமக்கு ஏற்றதான தீர்வல்ல எமது மக்கள் காலகாலம் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் மாறாகத்தான் இந்த புதிய அரசியல் அமைப்பு இருக்கின்றது.இதுதான் உண்மை .தமிழ் மக்கள் போருக்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று அவர்களின் கொள்கையுடன் இந்த கூட்டமைப்பு செயற்படும் என்ற நம்பிக்கையில் தேர்தல்களிலும் அவர்களுக்கு தமது ஆணையை வழங்கி வருகின்றார்கள்.ஆனால் மக்களின் இந்த நம்பிக்கையை துஸ்பிரயோகம் செய்து தெளிவாக ஒரு ஒற்றையாட்சிக்கு எமது மக்களையே ஏமாற்றி எமது கைகளை நீட்டி ஆதரவளிக்க பண்ணுவதற்க்கான வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இறங்கியுள்ளது.

இது தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும் சொலவதாக இருந்தால் இது கூட்ட்டமைப்புக்கும் எமக்குமான முரண்பாட்டின் பிரதிபலிப்பு என்று சொல்வார்கள் ஆனால் கூட்ட்டமைப்புக்குள்ளையே இருக்கக்கூடிய வடமாகாண முதலமைச்சர் உட்பட கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஒரு கட்சியும் அத்தோடு வடக்கு கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த சிவில் சமூக அமைப்புகளும் இந்த அரசியல் அமைப்பை முற்றாக நிராகரித்துள்ளனர். இதுதான் உண்மை.

உண்மையில் நாம் ஏறுகொள்ளக்கூடிய அம்சங்களான தேசம் தாயகம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான சமட்ஷி தீர்வு வருமாக இருந்தால் நாமும் அதை விரும்பியே ஆதரிப்போம். இதற்கான வேலைகளை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றோம்.எனவே தேர்தல்களின்போது எமக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களியுங்கள் அது எமக்கு முக்கியமில்லை ஆனால் எமக்கு முற்றும் பாதகமான இந்த அரசியல் அமைப்பு யாப்புக்கு எதிராக எமது பயணத்தில் இணையுங்கள் இந்த யாப்பை புறக்கணியுங்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்