அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்னால் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அரசாங்கம் எந்த விதமான முயற்சிகளையும் இன்னமும் எடுக்கவில்லை. அது மட்டுமின்றி இராணுவத்தினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை இன்னும் மீள கையளிக்கவில்லை. இப்படியான நிலை தாயகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு போராடிக்கொண்டிருக்கும் எம் மக்களுக்காகவும் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்காகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இப் போராட்டமானது நடைபெற்று பிரித்தானிய பிரதமருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படுள்ளது.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
இராணுவம் அபகரித்து வைத்திருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டும்.
மற்றும் காணாமல் ஆக்கப்படோர் தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்