தமிழ் மக்கள் பேரவை தீர்மானிக்கின்ற சக்தியாகட்டும்!

தமிழ் மக்கள் பேரவை அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கின்ற சக்தியாக பரிணமிக்கவேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெறத்தொடங்கியுள்ளது.தமிழ் மக்கள் பேரவை உதயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையினில் வடகிழக்கு தமிழர் தாயகத்தினில் தீர்மானிக்கின்ற சக்தியாக அது உருமாற்றம் பெறுவது காலத்தின் தேவையென அவதானிகள் கோருகின்றனர்.

மக்கள் இயக்கமாக மலர்ந்த தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் உரிமை – நலன் – அபிவிருத்தி என்ற வகையில் தனது வகிபங்கை விரிவுபடுத்தி வருகின்றது. எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியதன் ஊடாகவும் கிழக்கில் மாபெரும் முத்தமிழ் விழாவை எழுச்சியுடன் செய்து முடித்ததாலும் வடக்கு கிழக்கு உறவு பலப்பட்டதுடன் இரண்டு மாகாணங்களும் இணைந்து தமது பலத்தைப் பன்மடங்காக்கியுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் உறவுகளால் இணைந்து கொண்டது என்றால் அதற்கு வித்திட்ட சாதனை தமிழ் மக்கள் பேரவையையே சாரும்.
இந்நிலையினில் அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற கொள்கை தமிழ் மக்கள் பேரவையிடம் இருப்பது தமிழ் மக்களுக்குச் சாதகமானதல்ல என்ற கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டுவருகின்றது.ஆனாலும் அரசியலில் ஈடுபடாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி எத்தனையோ பணிகள் முன்னெடுக்கப்படமுடியும்.
எனினும் அரசியலால் நிர்ணயிக்கப்படுகின்ற முக்கியமான விடயங்கள் உண்டு என்பதையும் நாம் இவ்விடத்தில் அடியோடு நிரா கரித்துவிட முடியாது.
தமிழ் அரசியல் களத்தை; அரசியல் தலை மையை பொருத்தமற்றவர்கள் கைப்பற்றி வைத்திருக்கும்போது நிலைமை மோசமாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் மக்கள் எவ்வளவுதான் உணர்வுபூர்வமாக இருந்தாலும் அரசியல் ரீதியில் நாங்கள் ஏமாற்றப்பட்டு விடுவோம்.
எனவே அரசியல் என்ற விடயத்தை தமிழ் மக்கள் கவனிக்காமல் விடுவதென்பது மிகப்பெரும் வரலாற்றுத் தவறாகும்.
அரசியலில் ஈடுபடாமல் இருப்பதென்பது வேறு. அரசியலை வழிப்படுத்து; நெறிப்படுத்துவதென்பது வேறு.
இதுபோலத்தான் தமிழ் மக்கள் பேரவை அரசியலில் ஈடுபடாமல் விட்டாலும் தமிழ் மக் களுக்காக் தூய்மையான, நேர்மையான, விசுவாசமான அரசியலை நிர்ணயிக்கின்ற பெரும் பணியை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்