வடக்கு கிழக்கு இணைப்பதில் அவசரப்படத்தேவையில்லை – சுமந்திரன்!

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டுமென்பதே எமது விருப்பம். இருப்பினும், நாம் அவசரப்பட்டால் அது சாத்தியப்படாமல் போகலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், அண்மையில் வெளியான இடைக்கால அறிக்கையில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படுதல் என்பது ஒரு தெரிவு எனச் சொல்லப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கையில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படுதல் என்பது ஒரு தெரிவு எனச் சொல்லப்பட்டதே பெரியதொரு வெற்றி என நாங்கள் நினைக்கிறோம்.

ஆனால் இது சாத்தியப்படவேண்டுமென்பதே எங்களுடைய விருப்பம். இது சாத்தியப்படவேண்டுமானால் சில படிமுறைகளை நாங்கள் கையாளவேண்டும்.

சிலவேளைகளில் நாங்கள் அவசரப்படுவதினால் அது சாத்தியப்படாமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்