மைத்திரி முதுகில் குத்திவிட்டாராம் – சிவாஜி புலம்பல்!

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன முதுகில் குத்திவிட்டார் என ரெலோ அமைப்பின் சிவாஜிலிங்கம் தரப்பினர் சந்தேகம்வெளியிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் கைதிகள் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் சாதகமான முடிவினை மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஊடாக சிவாஜிலிங்கத்திற்குத் தெரியப்படுத்தியதாகவும், உண்ணாவிரதமிருக்கும்அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறைவுசெய்து வைத்துவிட்டு ஊடகங்களுக்குத் தெரிவிப்பதாக சிவாஜிலிங்கம் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இன்று இரண்டாவது நாள் நடைபெறும் நிலையில் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், குறித்தஅரசியல் கைதிகளின் உறவுகளுடன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கணேசன் வேலாயுதம் ஆகியோர் மேன்முறையீடு செய்வதற்காக சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரை அணுகியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை குறித்த சட்டத்தரணி நிராகரித்துள்ளதாகவும், குறித்த கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் அதனைக் குழப்பும் விதமாக சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படுவதாகவும் அச்சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்