பதவி பறிக்கப்பட்ட சின்னையா!

இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

55 வயதுடன் ஓய்வு பெரும் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை மைத்திரிபால சிறிசேன விரும்பினால் நீடித்திருக்க முடியும், எனினும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் என ட்ராவிஸ் சின்னையா இடம்பிடிக்கிறார்.

தற்போது புதிய கடற்படைக் கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்கவிடம் கையளித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நாளை முதல் கடமைகளைப் பெறுப்பேற்கவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்