இன்னும் 20 வருடத்தில் தமிழ் அழியும் – வடக்கு முதல்வர்

இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கியநடை நிறைந்ததாக முறையான உச்சரிப்பு டன் கூடியதாக அமைந்திருக்கும். ஆனால் இப்போதோ வானொலிப் பெட்டியை அல்லது தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பினால் அங்கு பேசப்படுகின்ற தமிழை எப்படி வர்ணிப்ப தென்று எமக்குப் புரியவில்லை.

திரைப்படங்கள் சில கூட இவ்வாறான பிழைகளை விட ஊக்குவிக்கின்றன. அவர்களின் பேச்சில் ஆங்கிலம் அறுபது சதவீதம் தமிழ் நாற்பது சதவீதம் என்று கூறப்படுகின்றது.

தமிழ் கொல்லப்படுகின்றதா என்று ஏங்கவேண்டியுள்ளது. இன்றைய நிலை நீடித்தால் இருபது வருடங்களில் tamilish என்ற ஒரு புதிய மொழி சென்னை போன்ற நகரங்களில் உற்பத்தியாகிவிடுமென மொழி வல்லுநர்கள் அபி ப்பிராயப்படுகின்றார்கள்.

எனவே மொழிக்கல்வியில் நீங்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். எம்மெல்லோரையும் பிணைப்பது எமது மொழியே. அந்த மொழியில் பாண்டி த்தியம் அடைவது இன்றியமையாதது.

அதே போன்று கணிதம், விஞ்ஞானம், புவியியல், வரலாறு போன்ற பாடங்களி லும் நீங்கள் கூடிய கவனம் செலுத்துவதன் மூலமே உலகைப் பற்றியும் எம்மைப் பற்றியும் எமது சூழலைப் பற்றியும் தெரிந்திட முடியும்.

நீங்கள் மருத்துவராக அல்லது பொறியியலாளராக அல்லது சட்டத்தரணியாக அல்லது ஆசிரியராக ஏதோ ஒன்றாக வர முடியும். ஆனால் எம்மைப் பற்றியும் சூழலைப் பற்றியும் எமது அரசியல் நிலைமை பற்றியும் அறிந்து கொண்டால் மட்டுமே எமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

பரந்த அறிவு என்று எம் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. அந்த பரந்த அறிவைப் பெறுவதற்கு கணணியறிவு போதுமான அனுசரணை வழங்கி வரு கிறது. அன்பான மாணவியர்களே!

‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது’

என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் வெறுமனே பரீட்சைகளுக்கு தயாராகின்ற ஒரு இயந்திரமாக அல்லாது பாடங்களை விளங்கிப் படியுங்கள். புதிய புதிய விடயங்களை தேடிப் படியுங்கள்.

நல்ல நூல்களை பெற்று வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்திக் கொள்ளுங்கள். என அறிவுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,
உரிமைகளிற்காக குரல் கொடுத்தால் இலங்கை அரசு தனது சலுகைகளை பறித்துக்கொள்ளுமென்பது அப்பாட்டமாக தெரிவதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார். வடமாகாண
யுத்தத்தில் உயிர் நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவு கூர்ந்து அழுவதையோ,தமது உடன் பிறப்புக்களை சகோதரங்கள் நினைவு கூர்ந்து

About சாதுரியன்

1 comments

உங்கள் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாத தலைப்பு ஏற்படுத்தியுள்ள பிரச்சினை தெரியுமா?.தலைப்பை மட்டும் குருட்டாம் போக்கில் பார்த்து விட்டு விக்கியை தமிழ் அழியும் என்று கூறிய யாரோ பாஜக தலைவர் என எண்ணி திட்டி தீர்த்துக்கொண்டு,மீம்ஸ் போட்டுக்கொண்டு உள்ளார்கள்.

மறுமொழி இடவும்

*