வவுனியாவில் கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது மாணவன் ஒருவர் காதில் கெட் செட் போட்டுக்கொண்டு புகையிரதப் பாதையில் சென்றபோது கடுகதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள். 

