மைத்திரியின் பாதுகாப்பு பிரிவினரால் அசிங்கப்படுத்தப்பட்ட சம்பந்தன்!

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவினரால் இரண்டு தடவைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மனவருத்தமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 15ஆம் நாள் அலரி மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் இடம்பெற்றது, இந்நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இரா.சம்பந்தன் அலரிமாளிகைக்குச் சென்றபோது, அங்கு அவரை வரவேற்பதற்குப் பதிலாக சிறீலங்கா ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அவரை பரிசோதித்துள்ளனர்.

மேலும், வெடிகுண்டுப் பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் “ஸ்கானிங்“ இயந்திரம் பழுதடைந்திருந்ததால் சம்பந்தன் இரண்டாவது முறையாகவும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

இரா.சம்பந்தனின் வயது, உடல்நிலை மற்றும் அவரது பதவி குறித்து தொடர்பில் கருத்தில்கொள்ளாத பாதுகாப்புப் பிரிவினர் அவரை அசௌகரியத்துக்குள்ளாக்கியதால் அவர் மிகுந்த மனவருத்தமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்