வடமாகாண சபையின் 108வது அமர்வு இன்று அமர்வில் 15 உறுப்பினர்கள்!

வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்று அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

15 உறுப்பினர்களுடன், சபை அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமர்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய 22 உறுப்பினர்கள் அமர்விற்கு வருகை தரவில்லை என தெரியவந்துள்ளது.

சபை அமர்வுகளிற்கு உறுப்பினர்கள் வரவில்லை எனவும், அதற்கு கடும் ஆட்சேபனையினை

தெரிவித்ததுடன், சபை அமர்வுகளின் போது உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்