முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்!

முல்லைத்தீவில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு ராணுவ சிப்பாய் எனும் வீதத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 108ஆவது அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”முல்லைத்தீவில் 60 ஆயிரம் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இது முல்லைத்தீவின் மொத்த சனத்தொகையில் 2 பொதுமகனுக்கு ஒரு ராணுவச் சிப்பாய் எனும் வீதமாகும். அதேபோல் பெருமளவு பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர்.

எனினும், கஞ்சா கடத்தல், திருட்டு சம்பவங்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. குறிப்பாக புதுக்குடியிருப்பு பகுதியில் அண்மைக் காலமாக அதிக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே இவ்விடயம் தொடர்பாக மாகாண சபை அதிக கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்