இந்தோனேஷியாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து, 47 பேர் பலி

ஜகார்த்தாவிற்கு வெளியே செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து நேரிட்டது. தீ விபத்தை அடுத்து அங்கிருந்த வெடிகள், வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது, தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவாகியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*