சிங்கப்புரில் பெண்களிடம் சேட்டை செய்த இந்தியர்கள் கைது!

பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக இந்தியாவை சேர்ந்த 2 பேருக்கு சிங்கப்பூர் நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் தயாள பல்வீந்த்ர் சிங் ( வயது 30) கடந்த ஜனவரி 29 ந்தேதி ஆர்செர்டு ரோட்டில் உள்ள ஆர்செர்டு டவரில் வைத்து 37 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.

இது போல் ஜக்ஜித் சிங் ( வயது 31) இவர் இதே பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் கடந்த ஆகஸ்ட் 2 ந்தேதி 24 மற்றும் 41 வயது உடைய 2 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளார்.

இது போல் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக மேலும் 6 சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தண்டனை நிரூபிக்கபட்டால் இவர்களுக்கு 2 வருடம் வரை சிறைதண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்சுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*