கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகமடைந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநில கண்ணூரில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் நேற்று 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்றும் 2 பேரை கேரள போலீசார் கைது செய்து உள்ளனர். தலசேரியை சேர்ந்த ஹம்சா, மற்றும் மனாப் ஆகியோரை வாலபட்டனம் போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை நியமித்தனர். ஹம்சாவுக்கு ஐ.எஸ் இயக்கத்தின் பெரிய தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. அவர் வடக்கு கேரளாவில் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்தார் எனக் கூறி உள்ளனர்.