எடப்பாடி அரசு விரைவில் கவிழும் – பாஜக தரப்பு முடிவு?

டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் அடுத்தடுத்த சமிக்ஞைகளால் ஆட்சி கவிழும் அபாயத்தில் இருப்பதாக் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இருந்தபோதுதான் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை 21 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். ஆனால் இதன்மீது எந்த ஒரு நடவடிக்கையுமே வித்யாசாகர் ராவ் எடுக்கவில்லை.

தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வித்யாசாகர் ராவைத் தொடர்ந்து புதிய ஆளுநராக பன்வாரிலால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடமும் டெல்லி எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம் என கூறியே அனுப்பி வைத்திருந்தது.

தற்போது டெல்லியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் நாம் நினைப்பது போல எதுவும் சாதித்துவிட முடியாது என்பதை டெல்லி தாமதமாகவேனும் புரிந்து கொண்டுவிட்டதாம்.

இதனால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப ஆளுநர் பன்வாரிலால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என சுதந்திரம் கொடுத்துவிட்டதாம் டெல்லி. அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவதில் டெல்லிக்கு உடன்பாடு இல்லையாம்.

ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு சட்டசபை பொதுத்தேர்தலை நடத்திவிடலாமே என்கிற மூடுக்கு வந்துவிட்டதாம் டெல்லி. இதனால்தான் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்காமலேயே இழுத்தடிக்கப்படுகிறதாம். இப்படி டெல்லியில் இருந்து வரும் சமிக்ஞைகள் தங்களுக்கு எதிராகவே இருப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்கிற பீதியில் இருக்கிறதாம் முதல்வர் எடப்பாடி தரப்பு.

About இலக்கியன்

மறுமொழி இடவும்