தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிடுகிறாரா கமல்?

நவம்பர் 7ம் தேதி கட்சி அறிவிப்பு கிடையாது என நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், “ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தம்முடைய பிறந்த நாளான நவம்பர் 7-ல் கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ள அமைப்புகள், இயக்கங்கள் கைகோர்க்கும் என்றும் கூறப்பட்டது.

ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கமல் இவ்வாறு மறுப்பு கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்