முதலமைச்சர் விக்கினேசுவரன் அவர்களின் நலனிற்காக நல்லூரில் இளைஞர்கள் வழிபாடு!

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் அவர் உடல் நலம் பெற்று மீண்டுவர வேண்டி இளைஞர்கள் சிலர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த புதன்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற குறித்த இளைஞர்கள் முதல்வரின் உடல் நலம் வேண்டி சிறப்பு வழிபாடு செய்வது தொடர்பாக ஆலைய நிர்வாகத்தினருடன் ஆலோசித்துள்ளார்கள். கந்த சஷ்டி விழா காலங்களில் சிறப்பு வழிபாடுகள் எதுவும் செய்யவதில்லை என்று கூறியதையடுத்து முதல்வரின் பெயரைக் கூறி அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளதுடன் தொடர்ந்தும் முதல்வர் உடல் நலம் பெற்று மீண்டுவர வேண்டி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது குறித்து அவ்விளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்… முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழர்கள் உறுதியான அரசியல் தலைமைத்துவம் இன்றி நின்ற நிலையில் ஆபத்பாந்தவராக விக்னேசுவரன் ஐய்யா வந்திருந்தார். அவர் ஒருவர்தான் தமிழ் மக்களுக்காகவே செயற்பட்டு வருகின்றார். அவரும் உடல் நலம் குன்றியிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் தலைவிதி இதுதானோ என்று எண்ணும் போது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கடைசியாக கடவுளிடம் வேண்டுதலை வைத்து அவரது உடல் நலம் சீராக வேண்டுமென வேண்டிவருகின்றோம் என்றார்கள்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காராணத்தால் மாகாண சபையின் கடந்த சில அமர்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணையத்தளத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்