ஊடகங்களுக்கு செய்தி வழங்கக்கூடாது – வடமாகாணசபை அவைத் தலைவர்!

வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கக்கூடாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 108ஆவது அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அவ்வமர்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில்,

வடமாகாணத்துக்குரிய நிதியை வடமாகாண சபையின் முன்னாள் ஆளுநரே பதுக்கி வைத்திருந்தார். அது நீண்ட காலம்தரப்படாதிருந்து தற்போதே வடமாகாணத்திற்கு தரப்பட்டது.

அவ்வாறு கிடைத்த 144மில்லியன் ரூபாவை மாகாண அமைச்சுக்களின் தலைமைச் செயலருடன் உரையாடி அமைச்சின் வேலைத்திட்டத்தை முன்வைத்து நிதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில அரசாங்க அதிகாரிகள் வேறு நோக்கத்துக்காக ஊடகங்களுக்கு தவறான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

ஊடகங்களுக்கு செய்தியை வழங்குமாறு கூறியவர்கள் யார்? எந்தவொருஅதிகாரிக்கும் ஊடகங்களுக்கு செய்தி வழங்க அனுமதியில்லை. அவ்வாறு வழங்கவும் கூடாது ன சீற்றத்துடன் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண
வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது

About இலக்கியன்

மறுமொழி இடவும்