ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாமீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றநிலையில் அதில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட6 பேருக்கு கொழும்புநீதிமன்றம்10 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் நாள்இ அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம்தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
அத்துடன் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளரான எமில்காந்தன் உட்பட 9 பேரை குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுதலை செய்தது.