முதல்வர் விக்னேசுவர்ன் நலம்பெற வேண்டி ஆலயங்களில் விசேட வழிபாடு!

வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவர்ன் அவர்களின் உடல் நலம்பெற வேண்டி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரசியல் தளத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகை உறுதியுடன் வலியுறுத்தி வரும் விக்னேசுவரன் அவர்கள் சுகவீனம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் கடந்த சில மாகாண சபை அமர்வுகளில் அவர் பங்கேற்றிருக்கவில்லை. இது குறித்து அறிந்த இளைஞர்கள் அவரது நலன் சிறக்க ஆலையங்களில் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று யாழ் தொல்புரத்தில் அமைந்துள்ள வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக் கிழமை வடமராட்சியில் அமைந்துள்ள வல்லிபுரம் கோவில் மற்றும் குருக்கட்டுப் பிள்ளையார் கோயிலில் முதல்வரின் உடல் நலம் சீராகி மீண்டும் அரசியல் அரங்கில் செயல்பட வேண்டி சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளார்கள்.

இவ்வாறு கடந்த வாரம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்